Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காட்டிக்கொடுத்த ட்ரோன்: சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் கைது

காட்டிக்கொடுத்த ட்ரோன்: சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் கைது

நான்கு பிளாக்குகள் கொண்ட இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து சிறப்பு எஸ்.ஐ. மதன் மோகன் பிளாக்கை திறந்து உள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வட்டார சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

நான்கு பிளாக்குகள் கொண்ட இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து சிறப்பு எஸ்.ஐ. மதன் மோகன் பிளாக்கை திறந்து உள்ளார். அப்போது, அங்கிருந்த கைதிகள் லிங்க பிரசாத் (25), ராஜா சிக்கந்தர் (24), கருப்புசாமி (25), திருப்பதி (23) சிலம்பரசன் (24), உட்பட 17 பேர் எஸ்.ஐ. மதன்மோகனை தாக்கி விட்டு வெளியே வந்துள்ளனர்.

மேலும், கதவு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்கபாண்டியனை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியுள்ளனர். காயமடைந்த எஸ்ஐ மதன் மோகன், காவலர் தங்கபாண்டியன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடந்த தேடுதல் பணியில், தப்பி ஓடியவர்களில், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர், சிலம்பரசன் உள்ளிட்ட 13 பேர் பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 17 பேரில் ஒருவர் சரண் அடைந்தார். 4 பேர் கைது செய்யப்பட்டனர். ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் வனப்பகுதியில் பதுங்கியிருநந் 8 பேர் கைதாகினர். எஞ்சிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், பணியில் இருந்த காவலர்கள் 9 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.



தலைவர்கள் கருத்து...

“புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தேனியில் 17 கைதிகள் தப்பியுள்ளனர். 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மொத்தத்தில், தவெக அரசு மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது”

- மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக.
-------------------


தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

- எடப்பாடி கே. பழனிசாமி, பொதுச்செயலாளர், அதிமுக.
--------------------------

தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு தேடும் பணி நடைபெறுகிறது.
சிறையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

- சி.டி. ஆர்.நிர்மல்குமார், சட்டத்துறை அமைச்சர்
----------------


150 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சிறையில் 350 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், பாதுகாப்பு பணியில் மொத்தம் 8 காவலர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. குறைவான பாதுகாப்பே, சிறைவாசிகள் தப்பி ஓட சாதகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

முந்தைய செய்தி
டெட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
அடுத்த செய்தி
இந்திய ஜவுளித் துறை மதிப்பை 350 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு

தொடர்புடைய செய்திகள்