Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடவுச்சொற்களை திருட முயற்சிக்கும் ‘கேப்சா’ - இணையதளத்தில் கவனமா இருங்க...

கடவுச்சொற்களை திருட முயற்சிக்கும்  ‘கேப்சா’ - இணையதளத்தில் கவனமா இருங்க...

பிப்ரவரி முதல் மே மாதத் தொடக்கம் வரையிலான காலத்தில், இத்தகைய போலிப் பக்கங்கள் மூலம் 11 லட்சத்துக்கும் அதிகமான சாதனங்களில் மறைமுகக் கட்டளைகள் இயக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது

பகிரவும் WhatsApp Facebook

போலி ‘கேப்சா’ பக்கங்கள் மூலம் பயனர்களைச் சில விசைகளை அழுத்தச் செய்து, அவர்களுக்குத் தெரியாமலேயே கணினியில் தீங்கிழைக்கும் கட்டளைகளை இயக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

இணையதளங்களில் நுழையும்போது, நாம் மனிதர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுவதுதான் ‘கேப்சா’. இந்த சோதனையைப் போலவே போலி பக்கங்களை உருவாக்கி இணையக் குற்றவாளிகள் வலை விரிக்கின்றனர். இந்தப் பக்கங்கள், பயனர்களை முதலில் ‘Windows+R’, பின்னர் ‘Ctrl+V’, இறுதியாக ‘Enter’ விசைகளை அழுத்துமாறு அறிவுறுத்துகின்றன. சாதாரண சரிபார்ப்பு நடைமுறை என்று நம்பிப் பலரும் இதைச் செய்கின்றனர்.

ஆனால், அந்த இணையப் பக்கத்தால் ஏற்கெனவே கணினியின் ‘கிளிப்போர்டில்’ ரகசியமாக நகலெடுக்கப்பட்ட கட்டளை, இந்தச் செயல்முறை மூலம் இயக்கப்படுகிறது. இதனால், கடவுச்சொற்களைத் திருடும் தீங்கிழைக்கும் மென்பொருள் கணினியில் நிறுவப்படலாம்.

பிப்ரவரி முதல் மே மாதத் தொடக்கம் வரையிலான காலத்தில், இத்தகைய போலிப் பக்கங்கள் மூலம் 11 லட்சத்துக்கும் அதிகமான சாதனங்களில் மறைமுகக் கட்டளைகள் இயக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. உண்மையான ‘கேப்சா’ சோதனைகள், கணினியில் கட்டளைகளை இயக்கச் சொல்லாது என்று அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையமான எஃப்டிசி எச்சரித்துள்ளது.

எனவே, மனிதர் என்பதை நிரூபிக்க விசைகளை அழுத்தச் சொல்லும் இணையப் பக்கங்களை நம்ப வேண்டாம். குறிப்பாக, ‘ரன்’ சாளரத்தைத் திறந்து, எதையாவது ஒட்டி இயக்குமாறு கூறினால், அந்த செயலை உடனடியாக நிறுத்துவது அவசியம். சந்தேகத்துக்குரிய பக்கத்திலிருந்து வெளியேறுவதும் பாதுகாப்புக்கு உதவும்.

முந்தைய செய்தி
திமுகவின் நலத் திட்டங்களை தவெக கைவிடக் கூடாது - மா.சுப்பிரமணியன்
அடுத்த செய்தி
Samsung's Exynos 2700 outperforms Qualcomm's flagship chip

தொடர்புடைய செய்திகள்