Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

6 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

6 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கல்லூரியின் இரண்டாவது இலக்காக சர்வதேச அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும்

பகிரவும் WhatsApp Facebook

'லட்சாதிபதி தீதிகள்' திட்டத்தின் கீழ் நாட்டில் 6 கோடி லட்சாதிபதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பவள விழா நினைவுப் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: 1951-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெண்களின் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது பெண்களின் எண்ணிக்கையும், அவர்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளன. இந்த முன்னேற்றத்தை வேலைவாய்ப்புகளாக மாற்றுவது நமது பொறுப்பாகும்.

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்ற முதல் ஏழு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். 2051-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள இக்கல்லூரி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் முன்னணி கல்வி நிறுவனமாக உருவெடுக்க வேண்டும்.

கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கான முதல் இலக்காக ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவது இருக்க வேண்டும். இதற்காக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), தேசிய வாழை ஆராய்ச்சி மையம், பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

மத்திய அரசின் அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உள்ளிட்ட திட்டங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சிக்கான நிதி மற்றும் வாய்ப்புகளைப் பெற வேண்டும். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், உயிரித் தொழில்நுட்பம், காலநிலை அறிவியல் போன்ற துறைகளிலும் மாணவிகள் திறன் பெற வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். கிராமப்புறங்களில் சுமார் மூன்று கோடி பெண்கள் 'லட்சாதிபதி தீதிகள்' திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டும் நிலையை அடைந்துள்ளனர். இந்த இலக்கை ஆறு கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்லூரியின் இரண்டாவது இலக்காக சர்வதேச அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உலகளாவிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முந்தைய செய்தி
பெல்ஜியம் செல்லும் ‘ரன் ரன்’ பாண்டா
அடுத்த செய்தி
ஏஐ வேலைவாய்ப்புகளை பறித்துவிடாது: சென்னை ஐஐடி ஆய்வறிக்கையில் தகவல்

தொடர்புடைய செய்திகள்