Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

100 ஆம்ப்ஸ்டார் மின்சார லாரிகளுக்கு ஆர்டரை பெற்றது ஜேஎஸ்டபிள்யு கிரீன்டெக்

100 ஆம்ப்ஸ்டார் மின்சார லாரிகளுக்கு  ஆர்டரை பெற்றது ஜேஎஸ்டபிள்யு கிரீன்டெக்

ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனம் 100 ஆம்ப்ஸ்டார் மின்சார சரக்கு லாரிகளுக்கு வணிக ஆர்டரை அளித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனத்திடம் இருந்து, 100 ஆம்ப்ஸ்டார் மின்சார லாரிகளுக்கான முதல் வணிக ஆர்டரைப் ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் நிறுவனம் பெற்றுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாக கொண்ட ஜேஎஸ்டபிள்யு குழுமத்தின் மின்சார வணிக வாகனப் பிரிவான ஜேஎஸ்டபிள்யு கிரீன்டெக், கடந்த செப். 22-்ல் ஆம்ப்ஸ்டார் மின்சார லாரியை அறிமுகப்படுத்தி இருந்தது. 55 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த ஆம்ப்ஸ்டார் மின்சார சரக்கு லாரிகள், சத்ரபதி சம்பாஜிநகரில் 90 ஏக்கர் பரப்பளவில் அமையும் புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலை ஆண்டுக்கு 15,000 மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்நிலையில், ஜேஎஸ்டபிள்யு கிரீன் டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனம் 100 ஆம்ப்ஸ்டார் மின்சார சரக்கு லாரிகளுக்கு வணிக ஆர்டரை அளித்துள்ளது. இதன்படி, ஆந்திராவின் நந்தியாலில் இருந்து கர்நாடகாவின் விஜயநகர் வரையிலான சுமார் 330 கி.மீ. வழித்தடத்தில் சிமென்ட் உற்பத்திக்கான கிளிங்கர் மற்றும் ஸ்லாக் ஆகிய மூலப்பொருள்களை எடுத்துச் செல்ல இந்த மின்சார லாரி பயன்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 1.25 லட்சம் டன் சரக்குகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த லாரிகளுக்கான பேட்டரிகளை, ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ எக்கோ மொபிலிட்டி, பேட்டரி சேவை (Battery-as-a-Service) திட்டத்தின் கீழ் வழங்கும். இதற்காக நந்தியால் - விஜயநகர் வழித்தடத்தில் நான்கு பேட்டரி மாற்று மையங்கள் அமைக்கப்பட உள்ளன. லாரிகளுக்கான சரக்கு போக்குவரத்தை பரேடீப் பரிவாஹன் நிறுவனம் மேற்கொள்ளும்.இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது, சுமார் 4.5 கோடி லிட்டர் டீசல் பயன்பாட்டைத் தவிர்க்கவும், 6,250 டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முடியும். இவ்வாறு அதில் கூறியுள்ளது.

இதுகுறித்து ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் மிட்டல் கூறுகையில், "ஆம்ப்ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே 100 மின்சார லாரிகளை சரக்கு போக்குவரத்துக்காக இயக்குவது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இந்தியாவில் சரக்குகளை எடுத்துச் செல்லும் முறையை மாற்றுவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றார்.

முந்தைய செய்தி
ரூ.3,767 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள்
அடுத்த செய்தி
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கு வால்மார்ட் இலக்கு

தொடர்புடைய செய்திகள்