Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கு வால்மார்ட் இலக்கு

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்  வர்த்தகத்துக்கு வால்மார்ட் இலக்கு

கரூரை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் 70 பிரதிநிதிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

வால்மார்ட் விருத்தி திட்டத்தில் மின்வணிக ஜவுளி வர்த்தகம் 10 பில்லியன் டாலராக இருக்கும் என்பதால் உற்பத்தியாளர்கள் தங்களது சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, சர்வதேச வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றடைய முடியும் என கரூர் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.


மத்திய அரசு சார்பில் இயங்கும் கரூர் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி ஜவுளி ஏற்றுமதி வசதி மையம் சார்பில், வீட்டு உபயோக துணிகளுக்கான சர்வதேச மின் வணிக ஏற்றுமதி குறித்து பயிலரங்கம் நடந்தது. இதில், வால்மார்ட் விருத்தி அமைப்பு வர்த்தகப் பிரிவு மூத்த மேலாளர் விஷேஷ் சர்மா பேசும்போது, "சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் திறனை மேம்படுத்த பயிற்சி, நிபுணர்களின் வழிகாட்டுதல், வணிக வளர்ச்சி உதவிகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. 2027-க்குள் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களைக் கொள்முதல் செய்ய வால்மார்ட் இலக்காக கொண்டுள்ளது" என்றார்.

ஐ2ஐ அறக்கட்டளை திட்ட இணை அலுவலர் ரெங்கநாதன் பேசுகையில், "வால்மார்ட் இணையதளத்தில் ஜவுளிப் பொருட்களைப் பட்டியலிடுதல், இணையவழி வணிகத்தை மேம்படுத்துதல், வணிகச் செயல்பாடுகளைச் சீரமைத்தல் மற்றும் சர்வதேச சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்யதல், பங்கேற்பாளர்கள் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்" என்றார். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சிலி ஆகிய நாடுகளுக்கு இந்திய வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களை இணையவழியில் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரக சந்தையில் விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்தும் பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

கரூரை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் 70 பிரதிநிதிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். ஜவுளிக் குழுமத்தின் தர உறுதி அலுவலர் எஸ்.பிரதீப்குமார் நன்றி கூறினார்.
முந்தைய செய்தி
100 ஆம்ப்ஸ்டார் மின்சார லாரிகளுக்கு ஆர்டரை பெற்றது ஜேஎஸ்டபிள்யு கிரீன்டெக்
அடுத்த செய்தி
மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்

தொடர்புடைய செய்திகள்