Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி விற்பனைக்குத் தயாராகும் திருப்பூர் காதர்பேட்டை ஜவுளிச் சந்தை!

தீபாவளி விற்பனைக்குத் தயாராகும் திருப்பூர் காதர்பேட்டை ஜவுளிச் சந்தை!
திருப்பூர் காதர்பேட்டை தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்.

பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள், காலர் மற்றும் ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டுகள், சட்டைகள், டிராக் பேன்ட்கள், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை ரகங்கள் கிடைக்கின்றன

பகிரவும் WhatsApp Facebook

பின்னலாடை நகரமான திருப்பூரின் முக்கிய உள்நாட்டுச் சந்தையாக விளங்கும் காதர்பேட்டையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை விற்பனைக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை பின்னலாடை விற்பனைக் கடைகள் செயல்படும் இப்பகுதியில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கூடுதல் தற்காலிகக் கடைகளும் அமைக்கப்படுகின்றன.


காதர்பேட்டையில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக, திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளின் உள்நாட்டு விற்பனைக்கும், ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தியாகும் உபரி மற்றும் இரண்டாம் தர ஆடைகளின் விற்பனைக்கும் காதர்பேட்டை முக்கியச் சந்தையாக விளங்குகிறது.

வழக்கமான கடைகளுடன், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நஞ்சப்பா பள்ளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத் தற்காலிகக் கடைகளும் அமைக்கப்படுகின்றன. இதனால், பண்டிகைக் காலங்களில் ஆடை விற்பனைக்கான இடங்கள் அதிகரிக்கின்றன.

இதுகுறித்து காதர்பேட்டை செகண்ட்ஸ் பின்னலாடை வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் நாகராஜ் கூறியதாவது: இந்த ஆண்டு பின்னலாடை உற்பத்திக்கான நூல், சாயமிடுதல், எலாஸ்டிக், எம்பிராய்டரி உள்ளிட்டவற்றின் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடைகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், ஆடைகளின் விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிமாநில மொத்த வியாபாரிகளின் கொள்முதல் குறையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அதேநேரம், பழைய விலைக்கே விற்பனை செய்தால் லாபம் குறையும் என்பதால், வியாபாரிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

காதர்பேட்டையில் கடந்த ஆண்டு ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் நடப்பாண்டில் அதைவிட குறைவாகவே விற்பனையாகும் சூழல் உள்ளது. பாலிஸ்டர் துணிகளின் பயன்பாடு அதிக நாட்கள் நீடிப்பதால், பயனாளிகள் மீண்டும் மீண்டும் வாங்கும் நாட்களும் அதிகரித்து இருப்பதால் வியாபாரம் குறைந்துள்ளது என்றார்.


விதவிதமான ஆடை ரகங்கள்

பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள், காலர் மற்றும் ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டுகள், சட்டைகள், டிராக் பேன்ட்கள், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை ரகங்கள் கிடைக்கின்றன. ரெடிமேட் சுடிதார்கள், நைட்டிகள், சிறுவர்களுக்கான ஆயத்த ஆடைகளும் விற்கப்படுகின்றன. மொத்தமாக ஆடைகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும், குறைந்த விலையில் ஆடைகளை வாங்க விரும்பும் பொதுமக்களுக்கும் ஏற்ற இடமாக இச்சந்தை திகழ்கிறது.




முந்தைய செய்தி
சென்னையில் வியோமா ஏஐ சார்பில் 52 மெகாவாட் தரவு மையம்
அடுத்த செய்தி
அதிக மின்கட்டணம் வசூல் மனு தலைமை அமர்வுக்கு மாற்றம்

தொடர்புடைய செய்திகள்