Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீயசக்தி யார் என்று மக்கள் புரிந்து கொண்டனர்: மு.க.ஸ்டாலின்

தீயசக்தி யார் என்று மக்கள் புரிந்து கொண்டனர்: மு.க.ஸ்டாலின்

ஆனால், தற்போது வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலையிலே ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

மேடைக்கு மேடை ‘தீய சக்தி, தீய சக்தி’ என்று முதல்வர் விஜய் புலம்பிக்கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசிதாவது: நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும்” என்று தெரிவித்தேன். ஆனால், தற்போது வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலையிலே ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மின் தடை அதிகரித்துள்ளது. நிர்வாகம் சீர்குலைந்து போயிருக்கிறது. பாலியல் குற்றவாளிகள் தங்குதடையின்றி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரச் செய்திகள் இல்லாத நாளே இன்றைக்கு நாட்டில் இல்லை.
இப்போதெல்லாம் குழந்தைகளைக் கடத்துகிற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘சிங்கப்பெண்’ என்று ஒரு படையை உருவாக்கினார்கள். அந்த சிங்கப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு படை உருவாக்கக்கூடிய நிலையைத்தான் தற்போதைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

தமிழக முதல்வர், ‘இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி’ என்று சொன்னார். அதற்கு, மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி என்று நான் சொன்னேன். அது தற்போது மாறி, பாலியல் வன்கொடுமையா, போதைப்பொருள் நடமாட்டமா என இரண்டுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. மேடைக்கு மேடை அவர் (விஜய்)‘தீய சக்தி, தீய சக்தி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். அந்தத் தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது.
நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து இந்த அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்குத் தயாராகுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம்: அன்புமணி கண்டனம்
அடுத்த செய்தி
Tourist ban imposed at Kodiveri Dam

தொடர்புடைய செய்திகள்