Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம்: அன்புமணி கண்டனம்

ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம்:  அன்புமணி கண்டனம்

ஆவின் நிறுவனம் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடியும், நிர்வாக குளறுபடிகளும் தான் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

வெண்ணெய், பனீர், பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த வல்லுநர் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. 


ஆனால், சந்தையின் தேவையை நிறைவேற்ற முடியாமல் ஆவின் நிறுவனம் தடுமாறி வருகிறது. ஆவின் நிறுவனத்தின் சார்பில் 230-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக பனீர், வெண்ணெய், பல வகை மில்க்ஷேக், பால் பவுடர், பாதாம், பிஸ்தா, வால்நட் மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

ஆவின் நிறுவனம் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடியும், நிர்வாக குளறுபடிகளும் தான் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆவின் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. அதை ஈடு செய்வதற்கு தேவையான நிதியை மாநில அரசு வழங்க மறுப்பதால் ஆவின் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் 32 லட்சம் லிட்டர் பால் என்பது தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் சுமார் 10% மட்டும் தான். இதை மும்மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது தான் ஆவின் வீழ்ச்சிக்கு காரணம் ஆகும்.

எனவே, ஆவின் நிறுவனத்தின் இப்போதைய செயல்பாடுகள் குறித்து ஆராயவும், அதன் வளர்ச்சி மற்றும் லாபத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் வல்லுநர் குழு அமைத்து அதன் அறிக்கையை பெற்று செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஆவின் நிறுவனத்தின் பால் வகைகள், பனீர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருள்களும் முழு அளவில் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுவதை ஆவின் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


முந்தைய செய்தி
நேபாள வெள்ளத்தில் 1,451 பேர் உயிரிழப்பு: முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்த நிசார் செயற்கைக்கோள்
அடுத்த செய்தி
தீயசக்தி யார் என்று மக்கள் புரிந்து கொண்டனர்: மு.க.ஸ்டாலின்

தொடர்புடைய செய்திகள்