Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் பயமில்லை: செல்லூர் ராஜு

தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் பயமில்லை: செல்லூர் ராஜு

தனுஷைப் பார்த்து விஜய் கட்சியினர்தான் பயப்படுகிறார்கள்.

பகிரவும் WhatsApp Facebook

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரட்டும்; அவரை பார்த்து எங்களுக்கு பயமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகிறார். 30-ம் தேதி வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பசும்பொன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

 
மக்களுக்கு விலைவாசி உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளது. மின்சார டெண்டரை திடீரென ரத்து செய்துள்ளனர். அதிக விலை கொடுத்து மின்கொள்முதல் செய்கின்றனர். ஒரு யூனிட் ரூ.41-க்கு வாங்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்போது ரத்து செய்துள்ளனர்.

 
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்ஜிஆர் போல வர முடியாது. தற்போது தனுஷைப் பார்த்து விஜய் கட்சியினர்தான் பயப்படுகிறார்கள். எங்களுக்கு பயமில்லை. இவ்வாறு செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

முந்தைய செய்தி
எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள்: அரசாணையில் திருத்தம் செய்த தமிழக அரசு
அடுத்த செய்தி
ஏர்டெல் வாடிக்கையாளர்- வீர்தாஸ் சந்திப்புக்கு ஏற்பாடு

தொடர்புடைய செய்திகள்