Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள்: அரசாணையில் திருத்தம் செய்த தமிழக அரசு

எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள்: அரசாணையில் திருத்தம் செய்த தமிழக  அரசு

இந்த விதியில் மாற்றம் கொண்டுவரக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் இனி அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கலாம் என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

2026-27-ம் நிதியாண்டுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.3.54 கோடி வீதம், மொத்தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கடந்த ஜூலை 21-ல் வெளியிடப்பட்ட எம்எல்ஏ நிதி வழிகாட்டுதல் நெறிமுறைகளில், அனுமதிக்கப்பட்ட பணிகளின் பட்டியலில் கட்டுப்பாடு இருந்தது. அதாவது, எம்எல்ஏ நிதியைப் பயன்படுத்தி அரசுப் பள்ளிகள், ஐடிஐக்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு மட்டுமே உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க முடியும் என்று விதி இருந்தது.

இந்த விதியில் மாற்றம் கொண்டுவரக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார். அதைப் பரிசீலித்த தமிழக அரசு, அந்தப் பட்டியலில் 'அங்கன்வாடி மையங்கள்' என்ற வார்த்தையையும் கூடுதலாகச் சேர்த்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம், இனி ஒவ்வொரு எம்எல்ஏவும் தனது தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான மேஜைகள், நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை, தங்களது நிதியிலிருந்தே நேரடியாக வாங்கிக் கொடுக்க முடியும்.

ஆரம்பகாலக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மையங்களாகச் செயல்படும் அங்கன்வாடிகள் இந்த நடவடிக்கையால் தனியார் பள்ளிகளுக்கு இணையான உட்கட்டமைப்பைப் பெறும். மேலும், இது அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சிறப்பான கற்றல் சூழலை உருவாக்குவதுடன், அங்கு பணிபுரியும் அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பெரும் உதவியாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
சட்டவிரோத சிம் பாக்ஸ் நெட்வொர்க்: 2 பேர் கைது
அடுத்த செய்தி
தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் பயமில்லை: செல்லூர் ராஜு

தொடர்புடைய செய்திகள்