Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சின்ன வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை

சின்ன வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை

சின்ன வெங்காயம் தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

வெங்காய வரத்து குறைந்துள்ளதால் திருப்பூரில் தொடர்ந்து வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.65-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.65-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அன்றாட சமையலில் வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அதன் விலை உயர்வு பொதுமக்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. வெங்காய வரத்து குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


திருப்பூர் சந்தைப்பேட்டைக்கு தினமும் 10 லோடு சின்ன வெங்காயம் வந்த நிலையில், தற்போது 6 முதல் 7 லோடுகள் மட்டுமே வருகிறது. அதேபோல, தினமும் 30 லோடு பெரிய வெங்காயம் வந்த நிலையில், தற்போது 15 லோடுகள் மட்டுமே வருவதாகக் கூறப்படுகிறது.


மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தையே அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழலில், அங்கிருந்தும் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பொங்கலூர், அந்தியூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
எச்சரிக்கை தேவை - சர்வதேச அளவில் சர்வர்களில் பாதுகாப்பு குறைபாடு
அடுத்த செய்தி
100% subsidy for black gram cultivation

தொடர்புடைய செய்திகள்