Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடலுக்கு அடியில் 28 லட்சம் விலாங்கு மீன்கள்: விஞ்ஞானிகளையே வியக்க வைத்த அதிசயம்

கடலுக்கு அடியில் 28 லட்சம் விலாங்கு மீன்கள்: விஞ்ஞானிகளையே வியக்க வைத்த அதிசயம்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவுக்கு அருகே, கடலுக்கு அடியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்தில் 28 லட்சம் விலாங்கு மீன்கள் ஒன்றாகக் கூடுவது கண்டறியப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்குத் தெற்கே அமைந்துள்ள பேஷன்ஸ் சீமவுன்ட் (Patience Seamount) எனப்படும் தனிமையான ஓர் ஆழ்கடல் மலையைச் சுற்றி, லட்சக்கணக்கான விலாங்கு மீன்கள் ஒன்று கூடுகின்றன. பொதுவாக, அமைதியாகக் காணப்படும் அந்த ஆழ்கடல் பகுதி, அப்போது விலாங்கு மீன்களால் நிரம்பி, ஓர் அற்புதக் காட்சியாக மாறிவிடுகிறது.

இந்த ஆழ்கடல் உயிரினங்கள் கூடை வடிவ விலாங்கு மீன்கள் (Basketwork eels — Diastobranchus capensis) என அழைக்கப்படுகின்றன. இவை தங்களது வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இனப்பெருக்கத்திற்காகவே இவ்வாறு ஒன்றுகூடுகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது, ஆஸ்திரேலியாவின் CSIRO ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கடல்சார் விஞ்ஞானி பென் ஸ்கவுல்டிங் தலைமையிலான ஆய்வுக் குழு, இதுவரை மர்மமாக இருந்த இவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. ஆய்வாளர்களின் கணிப்பின்படி, சுமார் 28 லட்சம் விலாங்கு மீன்கள் இருக்கக்கூடும் என்றும் இவை அனைத்தையும் சேர்த்தால், அவற்றின் மொத்த எடை 3,500 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
முந்தைய செய்தி
தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரிட்டன் பிரதமர்
அடுத்த செய்தி
Google unveils Gemini 4 Carbon, boosts cybersecurity focus

தொடர்புடைய செய்திகள்