Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எகிறிய காஸ் சிலிண்டர் விலை - விறகு அடுப்புக்கு திரும்பும் மக்கள்!

எகிறிய காஸ் சிலிண்டர் விலை - விறகு அடுப்புக்கு திரும்பும் மக்கள்!

விறகு அடுப்புக்கு திரும்பும் பாகிஸ்தான்

பகிரவும் WhatsApp Facebook

அன்றாட உணவைச் சமைப்பதே பாகிஸ்தானின் ஏழைக் குடும்பங்களுக்குப் பெரும் செலவாக மாறியுள்ளது. சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதால், கைபர் பக்துன்க்வாவின் வடக்குப் பகுதிகளில் ஒரு கிலோ எரிவாயு விலை 750 பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது. சில இடங்களில் சிலிண்டர் விலை 10,000 பாகிஸ்தான் ரூபாயைக் கடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அக்டோபர் மாதத்துக்கு ஒரு கிலோ எரிவாயுவின் அதிகாரப்பூர்வ விலையை 279.34 பாகிஸ்தான் ரூபாயாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையமான ‘ஓக்ரா’ நிர்ணயித்துள்ளது. ஆனால், பெஷாவரில் ஒரு கிலோ சுமார் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வடக்குப் பகுதிகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட சுமார் 2.7 மடங்கு அதிகமாக மக்கள் செலுத்துகின்றனர்.


இந்த நெருக்கடியின் பின்னணியில் விநியோகத் தடைகள் உள்ளன. ஈரான்–அமெரிக்க பதற்றத்தையொட்டி தாஃப்தான் எல்லை மூடப்பட்டதால் வரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தனது எரிவாயுத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்திசெய்யும் பாகிஸ்தானுக்கு, இந்தத் தடை கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக விலை வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுத்தால் வேலைநிறுத்தம் ஏற்பட்டு, விநியோகம் மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் தாமதமாவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலைமையைச் சீராக்க முயற்சிகள் நடைபெறுவதாக ஓக்ரா தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, குழாய் வழி இயற்கை எரிவாயுவும் போதிய அளவில் கிடைக்காததால், பெஷாவர் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமங்களிலும் மக்கள் விறகடுப்புக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், தேவை திடீரென அதிகரித்ததால், விறகு விலையும் உயர்ந்துள்ளது. எரிவாயுவிலிருந்து தப்பிக்க மாற்று தேடிய குடும்பங்களுக்கு, அங்கும் செலவுச் சுமையே காத்திருக்கிறது.

முந்தைய செய்தி
இணைய தளங்கள் முடக்கம் - தொழில்நுட்பக் கோளாறா, திட்டமிட்ட தாக்குதலா?
அடுத்த செய்தி
அரிய கனிம வளம் - துருக்கியின் கனவுக்கு சீன ஆய்வு சவால்

தொடர்புடைய செய்திகள்