Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதினை விட உயர்ந்த மனிதர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

புதினை விட உயர்ந்த மனிதர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்கும் மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போ.

மொசாம்பிக், ரஷ்யக் கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் பிரதிபலிக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போவைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று, 3-வது ரஷ்யா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போ மாஸ்கோ சென்றார். அப்போது, கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இருநாட்டு அதிபர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்த சந்திப்பின் புகைப்படங்களை மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போ வெளியிட்டார். ஆனால், ரஷ்ய தரப்பு ஆரம்பத்தில் அவற்றை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
மொசாம்பிக் அதிபர் டேனியல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அன்பான நாட்டு மக்களே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று, மூன்றாவது ரஷ்யா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாங்கள் மாஸ்கோ வந்துள்ளோம்.

மொசாம்பிக், ரஷ்யக் கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடைபெற்ற எரிவாயு ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (GECF) 8-வது உச்சி மாநாட்டிலும் பங்கேற்றோம். அந்த மாநாட்டில், எரிசக்தி வளங்கள் நமது மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த எக்ஸ் பதிவில் இரு நாட்டு அதிபர்களும் கைக்குலுக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதில், புதினின் உயரம் 5 அடி 7 அங்குலம் எனவும், டேனியல் சாப்போவின் உயரம் சுமார் 6 அடி 8 அங்குலம் எனவும் தெரிகிறது. இருவருக்கும் இடையில் ஒரு அடிக்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. இதை சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

புதின் தனது உயரம் குறித்து அதிக அக்கறை கொண்டவர் என்றும், உயரமாகத் தோன்றுவதற்காகத் தடிமனான அடிப்பகுதியைக் கொண்ட காலணிகளை அணிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புதினின் உயரத்தை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

முந்தைய செய்தி
CM Vijay to roll out ₹1,000-crore welfare aid in Erode
அடுத்த செய்தி
டைனோசர்களை அழித்த விண்கல்: உலகை ஆக்கிரமிக்க எறும்புகளுக்கு உதவியதா?

தொடர்புடைய செய்திகள்