Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமீரக கடற்கரைகளை மூடவைத்த எண்ணெய் கசிவு

அமீரக கடற்கரைகளை மூடவைத்த எண்ணெய் கசிவு
உம் அல் குவைனில் கடலில் பரவியுள்ள எண்ணெய் படலம்.

அனைத்துக் கடற்கரைகளும் கடலோரப் பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஹோர்முஸ் நீரிணை அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் எண்ணெய் கப்பலிலிருந்து பரவிய எண்ணெய் படலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் கரையை எட்டியுள்ளது. உம் அல் குவைனில் அனைத்துக் கடற்கரைகளும் கடலோரப் பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த 19-ம் தேதி சிறியதாக தென்பட்ட எண்ணெய் கசிவு, இரு நாட்களில் கப்பலிலிருந்து 35 கிலோ மீட்டருக்கும் அப்பால் பரவியதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. கரையொதுங்கிய எண்ணெயால் கடல்நீர் கருமையாக மாறியிருப்பதும் காணொளிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கசிவு ஏற்பட்ட கப்பலின் அமைவிடமும், அளவும், பனாமா கொடியுடன் இயங்கும் ‘ஜெம் நம்பர் 2’ கப்பலுடன் பொருந்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கியதில் இக்கப்பலில் தீப்பற்றியது. கப்பலிலிருந்த 22 இந்திய மாலுமிகளும் மீட்கப்பட்டதாக துபாயிலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
எண்ணெய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், கரைகளைச் சுத்தப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பவளப்பாறைகள், கடற்புல்வெளிகள், ஆமைகள் வாழும் சினியா, கோர் அல் பெய்தா தீவுகளை நோக்கியும் எண்ணெய் பரவுவதால் சூழலியல் கவலை எழுந்துள்ளது. பாதிப்பின் முழு அளவை மதிப்பிட இன்னும் அவகாசம் தேவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


எனினும், கசிவுக்குக் காரணமான கப்பலின் பெயரையோ, கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தையோ அமீரக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தொழில்நுட்பக் குழுக்களின் மதிப்பீடுகள் முடிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் வரை கடற்கரைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
Despite global tensions, India's business confidence rises
அடுத்த செய்தி
நிறுவன முதலீட்டாளர்களுடனான அழைப்புப் பதிவு கட்டாயம்

தொடர்புடைய செய்திகள்