Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

'The Rugby Players' புகைப்படத்திற்காக இந்திய தம்பதிக்கு விருது

'The Rugby Players' புகைப்படத்திற்காக இந்திய தம்பதிக்கு விருது
கென்யாவின் சோலியோ வன விலங்குக் காப்பகத்தில் காண்டாமிருகங்கள் கூட்டமாக ஓடிவருவதால் அச்சத்தில் பறக்கும் கொக்குகள். ‘தி ரக்பி பிளேயர்ஸ்’ என்ற இந்தப் படத்துக்காக இந்திய தம்பதி பிரீத்தி–பிரசாந்த் சாக்கோவுக்கு எப்சன் டிஜிட்டல் கலை விருது கிடைத்துள்ளது.

இந்தியத் தம்பதியான பிரீத்தி–பிரசாந்த் சாக்கோவுக்கு, ‘தி ரக்பி பிளேயர்ஸ்’ படத்துக்காக எப்சன் டிஜிட்டல் கலை விருது கிடைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பாய்ந்தோடும் காண்டாமிருகங்கள், வானில் நடனமாடும் துருவ ஒளிகள், பிரம்மாண்ட எரிமலைகள் என இயற்கையின் அபூர்வக் காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படங்கள், 2026 எப்சன் சர்வதேச பனோரமா போட்டியில் விருதுகளை வென்றுள்ளன.

அகன்ற காட்சிப்பரப்பைப் பதிவு செய்யும் இந்தப் புகைப்படப் போட்டி, தொடர்ந்து 17-வது ஆண்டாக நடைபெற்றது. இதில் 93 நாடுகளைச் சேர்ந்த 1,037 புகைப்படக் கலைஞர்களின் 4,084 படங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டைவிட வரவேற்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த டேனியல் வினே கார்சியா, பொதுப்பிரிவின் சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்வானார். சிலியின் பரினகோட்டா எரிமலையை அவர் பதிவு செய்த ‘உறங்கும் ராட்சதன்’ படம் கவனம் ஈர்த்தது.

வானிலிருந்து எடுக்கப்பட்ட 33 தனித்தனி படங்களை இணைத்து, 360 டிகிரி காட்சியாக இதை உருவாக்கியுள்ளார். மலைகளின் பிரம்மாண்டத்தையும் சுற்றியுள்ள நிலப்பரப்பையும் ஒரே படத்தில் வெளிப்படுத்தியது இதன் சிறப்பு.

இந்தியத் தம்பதியான பிரீத்தி–பிரசாந்த் சாக்கோவுக்கு, ‘தி ரக்பி பிளேயர்ஸ்’ படத்துக்காக எப்சன் டிஜிட்டல் கலை விருது கிடைத்துள்ளது. துபாயில் வசிக்கும் இவர்கள், வனவிலங்குகளை இணைந்து படம்பிடித்து வருகின்றனர்.

கென்யாவின் சோலியோ வனவிலங்குக் காப்பகத்தில், ஐந்து வெள்ளைக் காண்டாமிருகங்கள் திடீரென ஓடத் தொடங்கிய தருணத்தை இவர்கள் பதிவு செய்தனர். முன்னால் இருந்த கொக்குகள் பறந்து விலகும் காட்சி, படத்துக்கு உயிரோட்டம் அளித்துள்ளது.

ஸ்பெயினின் தோமஸ் சான்செஸ் ரூயிஸ், அமெச்சூர் பிரிவின் சிறந்த கலைஞரானார். ஐஸ்லாந்தின் வெஸ்ட்ராஹார்ன் மலைகளுக்கு மேலே பச்சை நிறத்தில் விரிந்த துருவ ஒளிகளைப் பதிவு செய்த அவரது படங்கள் பாராட்டைப் பெற்றன.

இயற்கை மற்றும் நிலப்பரப்புப் பிரிவில், மிக்கெல் இராயெட்டாவின் நியூசிலாந்து பால்வெளிப் படம் முதலிடம் பிடித்தது. தெளிவான இரவுக்காகக் காத்திருந்து, 107 படங்களை இணைத்து இந்தக் காட்சியை அவர் உருவாக்கியுள்ளார்.

நகரக் கட்டிடங்கள், கடல்வாழ் உயிரினங்கள், பனிப்பிரதேசங்கள் உள்ளிட்ட காட்சிகளும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வான்வழிப் புகைப்படப் பிரிவுகளுக்கு மட்டும் 680 படங்கள் வந்துள்ளன. தொழில்நுட்பத்துடன் பொறுமையும் கலைப்பார்வையும் இணைந்த படைப்புகள் இப்போட்டியில் முன்னிலை பெற்றுள்ளன.

முந்தைய செய்தி
பனியுகத்துக்கு ‘பிரேக்’ போட்ட புவி வெப்பமயமாதல்
அடுத்த செய்தி
Chinese automakers expand in Europe to avoid EU tariffs

தொடர்புடைய செய்திகள்