Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி முதலீட்டுக்கு 10 பங்குகள் - ஜியோஜித் பரிந்துரை

தீபாவளி முதலீட்டுக்கு 10 பங்குகள் - ஜியோஜித் பரிந்துரை

'சம்வத் 2083' என்ற பெயரில் சிறப்பு முதலீட்டு அறிக்கையை ஜியோஜித் வெளியிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், நடுத்தர மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற 10 நிறுவனப் பங்குகளை ஜியோஜித் முதலீட்டு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, 'சம்வத் 2083' என்ற பெயரில் சிறப்பு முதலீட்டு அறிக்கையை ஜியோஜித் வெளியிட்டுள்ளது. இதில், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி), கோடக் மஹிந்திரா வங்கி, எடர்னல், டெக் மஹிந்திரா, சம்வர்தனா மதர்சன், இந்தியன் ஹோட்டல்ஸ், சஜிலிட்டி, பிவிஆர் ஐநாக்ஸ், சையன்ட் ஆகிய 10 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.


எல் அண்ட் டி நிறுவனத்தின் ஆர்டர் கையிருப்பு 27.1 சதவீதம் உயர்ந்து ரூ.7.79 லட்சம் கோடியை எட்டியுள்ளது. டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு லாப வரம்பு தொடர்ந்து 12 காலாண்டுகளாக மேம்பட்டுள்ளது.
எடர்னல் நிறுவனத்தின் பிளிங்கிட் கடைகள் எண்ணிக்கையை 2028 மார்ச்சுக்குள் சுமார் 5,000 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


வங்கிகள், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாகங்கள், ஹோட்டல் மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், அமெரிக்க கடன்பத்திர வருவாய் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை ஆகியவை சந்தைக்குச் சவாலாக உள்ளன.


இருப்பினும், அண்மைய சந்தைச் சரிவு நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஜியோஜித் மதிப்பிட்டுள்ளது.

நிறுவனம்           நேற்றைய முடிவு விலை (ரூ.)
ஐசிஐசிஐ வங்கி                 1,387.40
எல் அண்ட் டி                      3,939.90
கோடக் மஹிந்திரா வங்கி 458.35
எடர்னல்                                344.00
டெக் மஹிந்திரா               1,786.90

முந்தைய செய்தி
நீண்டகால முதலீட்டுக்கு 5 பங்குகள்: சாய்ஸ் புரோக்கிங் பரிந்துரை
அடுத்த செய்தி
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்