Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.3,767 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள்

ரூ.3,767 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள்

கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களில், புதிய தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 5 மாவட்டங்களில் ரூ.3,767 கோடி முதலீட்டில் 8 புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் 4,853 பேருக்குப் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும் அரசின் தொலைநோக்கு இலக்கை நோக்கி முன்னேறும் வகையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்யவைத்து, உற்பத்தித் துறையை மேம்படுத்துவது தொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அனைத்துப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சீராகப் பரவும் வகையில், கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களில், புதிய தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 5 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ. 3,767 கோடி முதலீட்டில் 8 புதிய நிறுவனங்கள் நவீன ஆலைகளை அமைக்க உள்ளன.

 அதிநவீன மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி, மோட்டார் வாகன வடிவமைப்பு, புதுப்பிக்கத்தக்க பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் உயர் பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்படும். இதன் மூலம் உள்ளூரைச் சேர்ந்த 4,853 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அனுமதி பெற்றுள்ள புதிய தொழில் நிறுவனங்கள் தாமதமின்றி கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகளும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலைகளுக்குத் தடையற்ற மின்சாரம், சீரான சாலை வசதி மற்றும் தொழிற்பூங்கா நில ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் பெருகுவதுடன், வணிகம், போக்குவரத்துத் துறையும் மேம்படும். அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தொடர்ச்சியான தொழில் முதலீடுகள் வாயிலாகத் தமிழகத்தின் உற்பத்தித் துறை சர்வதேச அளவில் வலுப்பெற்று, நாட்டின் தலைசிறந்த தொழில் மாநிலம் தமிழகம் என்ற அந்தஸ்து தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
நவீன நகை மாடல்களை வாங்க மக்கள் விருப்பம்
அடுத்த செய்தி
100 ஆம்ப்ஸ்டார் மின்சார லாரிகளுக்கு ஆர்டரை பெற்றது ஜேஎஸ்டபிள்யு கிரீன்டெக்

தொடர்புடைய செய்திகள்