Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அவசியமா? : சீமான்

விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அவசியமா? : சீமான்

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது விமான எரிபொருளுக்கு தவெக அரசு வரிச்சலுகை அளிப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை விமான நிலையத்தில் விமானங்களுக்கான எரிபொருள் மீதான வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், பிற விமான நிலையங்களில் ஒரு சதவீதமாகவும் குறைத்திருக்கிறது.

விமான நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, விமான பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

பொருளாதார வளர்ச்சி என்பது தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை விமானங்கள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது என்பதில்தான் உள்ளது. 

மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.

ஆகவே, தமிழக மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
ரூ.2,600 கோடி திரட்டும் 5 நிறுவனங்கள் - விவரம் இதோ..
அடுத்த செய்தி
ரூ.50,000 கோடி அரிசி வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் - விலை குறையுமா?

தொடர்புடைய செய்திகள்