Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

நவம்பர் முதல் அனைத்து ஓய்வூதிய முன்மொழிவுகளும், Online Pension and Provident Fund Authorization System என்ற இணையவழி அமைப்பின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

நவம்பர் மாதம் முதல் அரசு ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் இணையதளம் (ஆன்லைன்) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதி மேலாண்மை, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய விநியோகப் பணிகளை, தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய 6 மண்டலங்களின் கீழ் 38 மாவட்டங்களில் கருவூலங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக் கருவூலங்கள் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 15 லட்சம் பேர் பலன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசுக் கருவூல நடைமுறைகளை டிஜிட்டல் முறையில் இயங்கும் வகையில், கருவூலத் துறை அதிரடி மாற்றம் செய்துள்ளது. இதன்படி, அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் இணையதளம் (ஆன்லைன்) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருவூலங்கள் மற்றும் கணக்குத்துறை இயக்குநர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

ஓய்வூதிய முன்மொழிவுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்கூட்டியே இறுதி செய்யப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் உரிய நேரத்தில் பெறப்படாததால், ஓய்வூதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் முரண்பாடுகளும் தாமதங்களும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க நவம்பர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதிய முன்மொழிவுகளும், Online Pension and Provident Fund Authorization System (OPPAS) என்ற இணையவழி அமைப்பின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவிலான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

அதேபோல், ஓய்வூதியத் தொகையைத் திருத்தி நிர்ணயம் செய்வதற்கான அனைத்து முன்மொழிவுகளும் OPPAS இணையவழி அமைப்பின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவையான அனைத்து விவரங்களும், பொருந்தக்கூடிய இடங்களில் உரிய ஆதார ஆவணங்களும் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருவூலத்துறையின் இந்த உத்தரவால், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படும். தாமதங்கள் தவிர்க்கப்படும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
பழைய மின் மீட்டர்களை புதிய கட்டிடங்களில் பொருத்த தடை: புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
அடுத்த செய்தி
8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு - ரூ.1.55 லட்சம் கோடி சரிவு

தொடர்புடைய செய்திகள்