Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நேபாள வெள்ளத்தில் 1,451 பேர் உயிரிழப்பு: முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்த நிசார் செயற்கைக்கோள்

நேபாள வெள்ளத்தில் 1,451 பேர் உயிரிழப்பு: முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்த நிசார் செயற்கைக்கோள்

ஆகஸ்ட் 26-ம் தேதி காலை லாங்டாங் லிருங் (Langtang Lirung) சிகரத்தின் வடக்குப் பகுதியில், சுமார் 5,130 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த தொங்கும் பனிப்பாறையின் ஒரு பகுதி திடீரென உடைந்து சரிந்தது

பகிரவும் WhatsApp Facebook

காத்மாண்டு:

நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் குறைந்தது 1,451 பேர் உயிரிழந்தனர். இந்தப் பேரழிவு ஏற்படுவதற்குப் பல வாரங்களுக்கு முன்பே, மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான அறிகுறிகளை நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கிய 'நிசார்' (NISAR) செயற்கைக்கோள் பதிவு செய்திருந்தது. ஆனால், அந்த தகவல்களை உரிய நேரத்தில் யாரும் ஆய்வு செய்யாததால், அபாயத்தை முன்கூட்டியே கண்டறிய முடியாமல் போனதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்தைச் (NRSC) சேர்ந்த 12 விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'ஜர்னல் ஆஃப் இந்தியன் சொசைட்டி ஆஃப் ரிமோட் சென்சிங்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தப் பேரழிவு குறித்து வெளியான முதல் அறிவியல் ஆய்வு அறிக்கை இதுவாகும். ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 19 வரை நிசார் செயற்கைக்கோளின் எல்-பேண்ட் ரேடார் (L-band Radar) மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில், பின்னர் நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் நிலப்பரப்பு வேகமாக நகர்ந்து கொண்டிருந்ததும், அந்தப் பகுதி நிலையற்ற நிலையில் இருந்ததும் பதிவாகியிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 19 வரையிலான காலகட்டத்தில் நிலப்பரப்பின் நகர்வு அதிகரித்ததுடன், அது ஒரு குறிப்பிட்ட திசையில் தொடர்ச்சியாக நகர்ந்ததும் தெரியவந்துள்ளது. சில பகுதிகளில் நிலப்பரப்பு கிடைமட்டமாக 5 மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்திருந்தது. எனினும், பேரழிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களுடன் முந்தைய தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான், இந்த அபாய அறிகுறிகள் தெளிவாகப் புரிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், 2025 ஜூலை 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது சுமார் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை அனுப்புகிறது.

ஆகஸ்ட் 26-ம் தேதி காலை லாங்டாங் லிருங் (Langtang Lirung) சிகரத்தின் வடக்குப் பகுதியில், சுமார் 5,130 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த தொங்கும் பனிப்பாறையின் ஒரு பகுதி திடீரென உடைந்து சரிந்தது. சுமார் 9.9 கோடி கன மீட்டர் அளவிலான பனிப்பாறை, உறைந்திருந்த பாறைகள் மற்றும் மண் ஆகியவை சரிந்து விழுந்தன.
மலைப் பகுதியில் சரிந்த பனிப்பாறை மற்றும் பாறைக் குவியல்கள் பள்ளத்தாக்கு வழியாக .9 கிலோமீட்டர் தூரம் நகர்ந்து, பெரும் வெள்ளப்பெருக்காக மாறின. இந்த வெள்ளம் லெண்டே கோலா மற்றும் திரிசூலி நதிகளின் 72 கிலோமீட்டர் நீளப் பகுதியைக் கடுமையாகப் பாதித்தது. இதில், சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டமைப்புகள் அழிந்தன. குறிப்பாக, நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையும் கடுமையாக சேதமடைந்தது.

நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் 21-ம் தேதி நிலவரப்படி 1,451 பேர் உயிரிழந்ததாகவும், 5,745 பேர் காணாமல் போனதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Private sector job fair in Ariyalur
அடுத்த செய்தி
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம்: அன்புமணி கண்டனம்

தொடர்புடைய செய்திகள்