Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சினை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்

தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சினை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்
மதுரையில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பெட்டகத்தில் இருந்து பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை பெற்றுக்கொண்ட அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள்.

நடிகர் தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன? அவர் இஷ்டம், பாஜகவுடன் பேசுவதில் என்ன தவறு? நாங்களும் பாஜகவுடன்தான் இருக்கிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்னை இல்லை என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழா அக்.30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் மதுரை அண்ணாநகர், பாங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தேவர் சிலை தங்க கவசத்தை எடுத்து, தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் தனுஷ் வருகையை பார்த்து ஆளும் கட்சி பதற்றமடைகிறது. ஒரு நடிகராக (விஜயிடம்) தற்போது 5 ஆண்டு ஆட்சியை மக்கள் கொடுத்துள்ளனர். அடுத்து தனுஷிடம் கொடுத்து விடுவார்களோ என்று பதற்றமடைகின்றனர். நடிகர் தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன? அவர் இஷ்டம், பாஜகவுடன் பேசுவதில் என்ன தவறு? நாங்களும் பாஜகவுடன்தான் இருக்கிறோம்.

இடைத்தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் 45,000 வாக்குகளும், மற்றொரு தொகுதிகளில் 47,000 வாக்குகளும் பெற்றது. பாஜக மட்டும் தான் கூட்டணியில் இருந்தது. ஆனால், தவெக 6 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர்கள் பேசினர். ஆனால் ஆளும் கட்சிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட தவெகவுக்கு சென்றவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை.

தவெக அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி குறித்து விமர்சிப்பது நியாயமானது. இருப்பினும் அதற்கு பின்னாலும் ஆதரிப்பது ஏன்? இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரையில் பாங்க் ஆப் இந்தியா வங்கிப் பெட்டகத்தில் இருந்து பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை பெற்றுக்கொண்ட அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள்.




முந்தைய செய்தி
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் - மனு தள்ளுபடி
அடுத்த செய்தி
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை - தமிழகத்தில் மழைப்பொழிவு?

தொடர்புடைய செய்திகள்