Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கும்பகோணத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கும்பகோணத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 158 விவசாயிகள் 21 மெட்ரிக் டன் அளவு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் மு.பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடந்தது.

இதில், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 158 விவசாயிகள் 21 மெட்ரிக் டன் அளவு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 4 வணிகர்கள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். 


ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,871-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,419-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இதன், சராசரி விலை ரூ.7,991 ஆகும். கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.17 லட்சம் ரூபாய் என மு.பிரியமாலினி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
வேலூர் உழவர் சந்தையில் ரூ.1.31 கோடிக்கு விற்பனை
அடுத்த செய்தி
சேலம்-சென்னை விமான சேவையை மாற்றியமைக்க அமைச்சர் கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்