Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை - தமிழகத்தில் மழைப்பொழிவு?

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை - தமிழகத்தில் மழைப்பொழிவு?

இந்தப் புயலால் தமிழகத்தில் நேரடி மழைப்பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கக் கடலில் ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 8 துறைமுகங்களில் 2-ம் எண், ஒரு துறைமுகத்தில் 3-ம் எண் புயல் புயல் எச்சரிக்கைக் கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்தடுத்த நிலைகளில் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தப் புயலால் தமிழகத்தில் நேரடி மழைப்பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புயல் உருவானதையடுத்து சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 8 துறைமுகங்களில் 2-ம் எண் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

உணர்த்துவது என்ன?

புயல் எச்சரிக்கைக் கூண்டு என்பது புயல் அபாயம் குறித்து மீனவர்கள், கப்பல்கள் மற்றும் துறைமுகங்களுக்குத் தெரிவிக்க ஏற்றப்படும் சின்னமாகும். எண் 1 ஆரம்பக்கட்ட வானிலை எச்சரிக்கையையும், எண் 2 துறைமுகத்துக்குப் புயல் அச்சுறுத்தல் இருப்பதையும் குறிக்கிறது. எண் 3 புயல் காரணமாக துறைமுகப் பகுதியில் மோசமான வானிலை நிலவக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
முந்தைய செய்தி
தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சினை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்
அடுத்த செய்தி
பெரிய வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு

தொடர்புடைய செய்திகள்