Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி சொகுசு காரை பரிசளித்த நிறுவனம்

பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி சொகுசு  காரை பரிசளித்த நிறுவனம்

நிறு​வனத்​தின் 3-ம் ஆண்டு விழா​வின்போது, சிறந்த ஊழியருக்​கான விருது நடா​லியா சாவேஸுக்கு வழங்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

பிரபல ரியல் எஸ்டேட் நிறு​வனமான ‘ரிச்கீ பிராப்​பர்ட்​டீஸ்’ தனது நிறு​வன பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்​பிலான ஆடம்​பர காரைப் பரிசாக வழங்கி ஆச்​சரியப்​படுத்​தி​யுள்​ளது.

துபாய் ரிச்கீ பிராப்​பர்ட்​டீஸ் நிறு​வனத்​தில், நடா​லியா சாவேஸ் என்ற பெண் முகவ​ராக பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த 2 ஆண்​டுகளில் 500 மில்​லியன் டாலருக்​கும் அதி​க​மான (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.4,750 கோடி) சொத்துகளை விற்​பனை செய்து, சாதனை படைத்​துள்​ளார்.

நிறு​வனத்​தின் 3-ம் ஆண்டு விழா​வின்போது, சிறந்த ஊழியருக்​கான விருது நடா​லியா சாவேஸுக்கு வழங்கப்பட்டது. மேலும், நிறுவனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி தாபன் உத்​மான், நடாலியாவுக்கு சொகுசு காரை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. 

“ரிச்கீ நிறு​வனத்​தில் சிறப்​பாகப் பணி​யாற்​றினால் என்ன நடக்​கும் என்​ப​தற்கு இதுவே சான்று. பெரிய வெற்​றிகள், பெரிய கனவு​கள். வாழ்த்​துகள் நடா​லியா, இதற்கு நீங்​கள் முற்றிலும் தகுதி​யானவர்” என்று அந்த நிறு​வனம் வீடியோவில் பதிவிட்​டுள்​ளது. அவருக்குப் பரிசாக வழங்கப்பட்ட காரின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என்பது குறிப்​பிடத்​தக்​கது.

முந்தைய செய்தி
வங்கிக் கடன்கள் ரூ.232.54 லட்சம் கோடியாக உயர்வு
அடுத்த செய்தி
வறுமையிலிருந்து மீண்ட 25 கோடி மக்கள்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

தொடர்புடைய செய்திகள்