Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் கானா பேச்சுவார்த்தை

அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் கானா பேச்சுவார்த்தை

கானாவில் மிகப்பெரிய பாக்சைட் சுரங்கத்தை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவின் முன்னணி உலோக உற்பத்தி நிறுவனமான ரூசல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா, தனது முதலாவது அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், எரிசக்தித் துறையை வலுப்படுத்தவும் கானா திட்டமிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கானாவில் முதலாவது அணுமின் நிலையத்தை நிறுவுவதற்காக ரஷ்யாவுக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரோசாட்டத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா - ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பேசிய கானா அதிபர் மகாமா, நாட்டின் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பல்வேறு எரிசக்தி ஆதாரங்களை உள்ளடக்கிய திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, கானாவில் மிகப்பெரிய பாக்சைட் சுரங்கத்தை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவின் முன்னணி உலோக உற்பத்தி நிறுவனமான ரூசல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலகின் பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரூசல், கானா ஒருங்கிணைந்த அலுமினிய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனங்களைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இதன்மூலம், கானாவில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் வரை பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கானாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அஷாந்தி பிராந்தியத்தின் நியினாஹின் பகுதியில் பாக்சைட் சுரங்கத்தை அமைத்து இயக்க உள்ளது. அந்தப் பகுதியில் 10 கோடி டன்னுக்கும் அதிகமான பாக்சைட் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, ஆண்டுக்கு 12 லட்சம் டன் அலுமினா உற்பத்தி செய்யும் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாஸ்கோவில் நடபெற்ற ரஷ்யா - ஆப்பிரிக்கா உச்சி மாநாடு மூலம் ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க ரஷ்யா முயன்று வருகிறது. அணுமின் நிலையம், பாக்சைட் சுரங்கம் மற்றும் அலுமினிய உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ரஷ்யா - கானா இடையேயான பொருளாதார மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
Flower prices surge after spike in orders
அடுத்த செய்தி
Aavin faces hurdles in achieving Deepawali sweets sales

தொடர்புடைய செய்திகள்