Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கீரை கட்டு ரூ.25 முதல் 30-க்கு விற்பனை

கீரை கட்டு ரூ.25 முதல் 30-க்கு விற்பனை

கீரை கட்டுகள் மொத்த விலையில் ரூ.15-க்கு விற்பனையாகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

காட்பாடி, வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கீரை வகைகளின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் சிறுகீரை, அரைக்கீரை ஆகியவை அளவுக்கு ஏற்ப கட்டு ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கீரை விவசாயி வெங்கடேசன் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த லத்தேரி, எல்.ஜி.புதூர், தொண்டான் துளசி, கனகசமுத்திரம், காரணாம்பட்டு, திருவலம் பகுதிகளில் கீரை வகைகள் பயிரிடப்படுகிறது. இங்கு மணத்தக்காளி, சிறுகீரை, அரைக்கீரை, காசினி கீரை, முளைக்கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெங்காயத்தாள் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.


தினமும் கனகசமுத்திரம், கார்ணாம்பட்டு பகுதியில் இருந்து 6 லாரி லோடு அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கீரை வகைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. மழைக்காலம் என்பதால் கீரைகள் அதிகளவு அழுகி வீணாகிவிட்டது. 

இதனால் கீரை கட்டுகள் மொத்த விலையில் ரூ.15-க்கு விற்பனையாகின்றன. சில்லறை விலையில் கீரைகட்டு அளவுக்கு ஏற்ப ரூ.25 முதல் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கீரை விலை வெகுவாக குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
100% subsidy for black gram cultivation
அடுத்த செய்தி
Farm inputs available at subsidised rates in Karur

தொடர்புடைய செய்திகள்