Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செபி எச்சரிக்கையால் பிசி ஜுவல்லர் பங்கு 3.62% சரிவு

செபி எச்சரிக்கையால் பிசி ஜுவல்லர் பங்கு 3.62% சரிவு

இந்த விவகாரத்தில் உள்நபர் பங்கு வர்த்தகத்தைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, பிசி ஜுவல்லர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்றைய வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது. வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் ரூ.14.71 வரை குறைந்த இப்பங்கு, வர்த்தக முடிவில் 3.62 சதவீதம் சரிந்து ரூ.14.92-ஆக நிலைத்தது.

கடந்த 2025 ஏப்ரல்–ஜூன் காலாண்டு வர்த்தக விவரங்கள் தொடர்பான, பங்கு விலையைப் பாதிக்கக்கூடிய வெளியிடப்படாத தகவல்களின் மின்னணுப் பதிவேட்டை முறையாகப் பராமரிக்காததால், நிர்வாக இயக்குநர் பல்ராம் கார்க், நிறுவனச் செயலர் விஜய் பன்வார் ஆகியோருக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் உள்நபர் பங்கு வர்த்தகத்தைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. செபியின் எச்சரிக்கையால் நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கமளித்துள்ளது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 1,233 புள்ளிகள் உயர்வு: ரிலையன்ஸ் பங்கு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு
அடுத்த செய்தி
சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட நவீன ஆய்வகம்

தொடர்புடைய செய்திகள்